வானத்தை இடிக்கும் அந்தக் கனத்த குரல்
பேரா.கே. ஏ. குணசேகரன் என்றாலே நினைவிற்கு வருவது, கவிஞர் இன்குலாப்பின் 'மனுசங்கடா நாங்க மனுசங்கடா' பாடலைப் பாடும், வானத்தை இடிக்கும் அந்தக் கனத்த குரல். புதுச்சேரி நிகழ்த்துக்கலைத் துறையின் பேராசிரியர் முனைவர்.கரு.அழ. குணசேகரன் அவர்கள் இன்று இந்த வாழ்விலிருந்து மறைந்தார்.
தமிழிசை உலகிற்கும் எதிர்ப்புக்குரல் இயக்கங்களுக்கும் பேரிழப்பு.
"மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா - அட
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா
உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது
சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க — டேய்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா"

குட்டி ரேவதி
No comments:
Post a Comment