Friday, 22 January 2016

நண்பர் கே.ஏ.குணசேகரனுக்கு அஞ்சலி.

நண்பர் கே.ஏ.குணசேகரனுக்கு அஞ்சலி. 


எண்பதுகளில் அவர் மாணவராக இருந்த நாள் முதல் அவர் எங்களுக்குப் பழக்கமானவர். நாடகத்துறையில் ஒரு சாலை மாணாக்கர்கள். தேசிய நாடகப்பள்ளியின் பயிலரங்குத் தயாரிப்பான சே.ராமானுஜத்தின் 'பிணம் தின்னும் சாத்திர்னக்கள்' நாடகம் பன்சி கௌல் இயக்கத்தில் பெரிதும் குணசேகரனின் இசையையும் பாடும் திறனையும் சார்ந்திருந்ததை மறக்க முடியாது. கிராமிய இசையை வணிகமாக்கும் போக்கு உருவாகத் தொடங்கிய சமயத்தில் அதில் சிக்க மறுத்து தன் அரசியல் பண்பாட்டுப் பார்வையுடன் தெளிவாகத் தொடர்ந்து தனிப் பாதையில் பயணம் செய்தவர் குணசேகரன். அவருடன் பல முறை ஒன்றாகச் சேர்ந்து பணி செய்த நினைவுகள் மகிழ்ச்சி தருகின்றன. தொண்ணூறுகளில் அவரது பாடல்களை இன்குலாபின் கவிதை வரிகளோடு மேலை இசைக் கருவிகளுடன் ஃப்யூஷனாக்கி, அவரை 'தலித் குணா ராக்ஸ்' என்று உலக இசையரங்குக்கு எடுத்துச் செல்லும் திட்டத்துடன் பல பாடல்களை ரிகார்டிங் தியேட்டரில் பதிவு செய்தேன். பொருளாதார இயலாமையால் அந்தத் திட்டம் பாதியிலேயே நின்றுபோனது. கேட்டவுடன் எழுச்சியை ஏற்படுத்தும் 'மனுசங்கடா' என்ற அவரது குரல் எப்போதும் மனதில் நிற்கும்.


ஞானி சங்கரன்

No comments:

Post a Comment