சக்திக்கு வந்த பேராசிரியர் குணசேகரன் !
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்!!
பேராசிரியர் குணசேகரன் அவர்களின் பிரிவையிட்டு பெரியவர்கள் பலர் எழுதும் குறிப்புக்களைப் படிக்கையில் நானும் சிலவற்றை எழுதவேண்டியிருந்தது.
அவருடன் ஒரே ஒரு நாள் தான் என்னால் பழக முடிந்தது. சில மணி நேரங்களாயினும் ஒரு நீண்ட கல்வி நெறியைச் சில காலம் செய்தது போல இருந்தது./
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய எனது நண்பர் விமல்ராஜ்
கிச்சான்" என்ற குறு ந் திரைப்படத்தின் மூலம் பெயர் பெற்றவர்.
கிச்சான்" என்ற குறு ந் திரைப்படத்தின் மூலம் பெயர் பெற்றவர்.
பேராசிரியர் குணசேகரன் அவர்கள் கிழக்குப் பல் கலைக் கழகத்திற்கு வந்திருந்த வேளை நண்பர் விமல்ராஜ் என்னைத் தொடர்பு கொண்டு பேரா.குணசேகரனை
நேர் காணல் ஒன்றிற்கு ஒழுங்கு செய்யலாமா என்று கேட்டார்.
நேர் காணல் ஒன்றிற்கு ஒழுங்கு செய்யலாமா என்று கேட்டார்.
குணசேகரன் அவர்களை சக்தி எப் எம் இலும் சக்தி ரீ வீ காலை நேரடி நிகழ்ச்சியான காலைக் கதிரிலும் ஒழுங்கு செய்தோம்.
வானொலியில் அவரது நிகழ்ச்சி ஜனரஞ்சகமாய் அமைந்தது. பல நேயர்கள் கலந்து கொண்டனர்.
பல நாட்டார் பாடல்களைப் பாடிக் காட்டினார் !
அவரது பிரபலமான "மனுசங்கடா மனுசங்கடா .." என்ற பாடலை அவர் நேரடியாகப் பாடும்போது சக்தி நேரடி ஒலி பரப்பிற்கான சிரேஷ்ட பொறியியலாளர் ஒருவர் -அவர் ஜே வீ பி ஆதரவாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது- அந்தச் சிங்கள நண்பர் வந்து என்னிடம் கேட்டார் "இவர் ஒரு இடதுசாரி ஆளா?" என்று .
இசைக்கு மொழி இல்லை என்பதற்கு இது மிகவும் பொருத்தமான உதாரணம் என்பேன்.
சக்தியில் பல ஜனரஞ்சகமான நாட்டாரியல் இசைக் கருத்துக்களை அவர் பகிர்ந்தார் .
அவற்றில் ஒன்றைச் சொல்ல முன்னர் -அவர் பற்றி சில விடயங்களை சில நண்பர்களுக்குப் பகிரவேண்டியுள்ளது.
தமிழகத்தின் அரங்க ஆளுமை நாட்டுப் புறப் பாடல்களை மக்களிடையே கொண்டுவந்து சேர்த்தவர் இவர்.
நாட்டுப்புறக் கலை மரபை நவீன நாடக அரங்கில் சேர்த்துப் புதுப் போக்கினை உருவாக்கியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளைத் தனது ஆற்றல்மிகு குரலால் எழுச்சிகொள்ள வைத்தவர். பாரதிதாசன் கவிதைகள் சிலவற்றுக்கு அற்புதமாக இசையமைத்துப் பாடியவர்.
"ஈழத்தில் பேராசிரியர் சி.மௌனகுரு, பாலசுகுமார் போன்ற ஈழத்து நாடககர்த்தாக்களோடும் அவருக்கு நெருங்கிய நட்பிருந்தது. பல நாடுகளுக்கும் சென்று நாடகங்களை நடத்தியிருக்கிறார். நாட்டுப்புறவியலில் மட்டுமின்றி செவ்வியல் இலக்கியத்திலும் புலமை பெற்றவர் அவர் . உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றியபோது சில செவ்வியல் நூல்களுக்குப் புதிய விளக்கவுரைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.
சக்தியில் அவர் குறிப்பிட்ட பல நாட்டார் பாடல்கள் பற்றிய விடயங்களில் ஒன்றை மட்டும் இங்கு தருகிறேன்.
திரைப்படப் பாடல்களில் நாட்டார் இசை -அதில் அவர் வகிபாகம்- அனுபவம் பற்றிய ஒரு கேள்விக்கு அவர் குறிப்பிட்ட அனுபவம் இது .

அவர் சொன்ன பாங்கிலேயே இங்கு
தருகிறேன் :-
"சில வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் என்னிடம் பழைய நாட்டார் தாள வாத்தியங்களின் ஒலிகளை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டார் . நானும் அவரது வெகு அவசரமான காலத்திற்கும் எனது நேரசூசிக்குமிடயிலாக சில நாட்களைத் தயார் செய்து கொண்டு சில கிராமங்களுக்கு அவரைக் கூட்டிச் சென்றேன்"
" பல தாள வாத்திய இசைக்கருவிகளின் ஒலிகளையெல்லாம் ரகுமான் அவர்கள் பதிவு செய்தார். "
காலம் செல்ல- இந்த ஒலிச் சத்தங்களைத் தந்த கலைஞர்கள் என்னைத் தொடர்பு கொண்டு 'சார்! எப்போ சார் ரகுமான் சார் அந்த இசை ஒலிகளை திரைப்படங்களில் போடுவாரு?" என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.
காலம் செல்ல- இந்த ஒலிச் சத்தங்களைத் தந்த கலைஞர்கள் என்னைத் தொடர்பு கொண்டு 'சார்! எப்போ சார் ரகுமான் சார் அந்த இசை ஒலிகளை திரைப்படங்களில் போடுவாரு?" என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.
சங்கமம் -திரைப்படம் வெளிவந்தது
ரகுமான் என்னைத் தொடர்பு கொண்டார் .
மழைத்துளி மழைத்துளி ..என்ற பாடலில் நாங்கள் அவர்களிடம் ஒலி ப்பதிவு செய்த அவர்களின் தாள வாத்திய இசையைச் சேர்த்துள்ளேன் " என்று சொன்னார்.
ரகுமான் தாம் எடுத்த எல்லா ஒலிகளுக்குரிய கலைஞர்களுக்கும் நலல் சன்மானத்தையும் கொடுத்தார் "
இவ்வாறு பேராசிரியர் குணசேகரன் சக்தியில் சொன்னதை இன்று நண்பர்களுடன் பகிர்கிறேன்
No comments:
Post a Comment