Friday, 22 January 2016

அவரது பாத்திரத்தில் என்னைக் கண்டேன்

90களில் நான் சரிநிகரில் அருந்ததியன் எனும் பெயரில் எழுதி வந்த "தலித்தியக் குறிப்புகள்” பல ஏச்சு பேச்சுக்களையும், ஏளனங்களையும், சில இடங்களில் அவமானங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. என்னை மீண்டும் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டிய நூல் தோழர் குணசேகரன் எழுதிய அவரது சுயசரிதை “வடு”. மற்றவர்கள் ஏற்படுத்தும் காயங்களை புறந்தள்ளிவிட்டு எழ எனக்கு வழி சமைத்தது அவரது அந்த நூல் தான். அந்த நூலில் பல இடங்களில் அவரது பாத்திரத்தில் என்னைக் கண்டேன். அதிலிருந்த ஏராளமான அனுபவங்கள் எனது அனுபவத்துக்கு ஒத்தவை. அவர் வாழ்ந்த சூழல் கூட அப்படியே எனது சூழலை என் கண் முன் நிறுத்தின

சரவணன் நோர்வே.

No comments:

Post a Comment