தமிழ் சமுதாயத்தின் மிகப்பெரிய சொத்து ஒன்று பறிபோயிருக்கிறது! அண்ணன் கே.ஏ.குணசேகரனுக்கும்,எனக்குமான நட்பு,உறவு பற்றி எதைச்சொல்வது,எதைவிடுப்பது எனப்புரியவில்லை! தமிழர் மரபு,தமிழர் வாழ்வு,தமிழர் கலைகள் என இவைகள் குறித்த சிந்தனை மற்றும் செயல்பாட்டிலேயே அவரது வாழ்வு இன்றோடு முடிந்திருக்கிறது!
அவரின் குரலுக்கு இணை இங்கே யார் இருக்கிறார்கள்!! ஒடுக்கப்பட்ட சாதி என்பதாலேயே அவரை துணை வேந்தராக நியமிக்க மறுத்தார்கள்.
அழகி திரைப்படத்தில் பெரிய கட்டையனாக பலாப்பழத்தொடு வந்து ஒருகையையும்,காலையும் மடித்து உடைத்து அனைவரின் மனதிலும் நின்றவர். பாரதி படத்தில் அவருடன் ஆடிப்பாடி பாரதியின் கையால் பூணூல் போட்டு விடப்பட்டவர். ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்தில் அவர் பாடிய 'வேலாயி அடியே வேலாயி!' பாடல் என்றைக்கும் மறையாது.நானும்,அண்ணனுடன் இணைந்து எவ்வளவோ தமிழ்ப்பணியை ஆற்றியிருக்கிறோம்.
தமிழ் அரசியல் வரலாற்றில் நேர்மையின் வடிவாக போற்றப்படுகிற கக்கன் அவர்களின் பேரன் நான் என்பதை அவர் சொல்லியபோது என்மனதில்அண்ணன் எங்கோஉயர்ந்து போனார்!! அவர் நாம்என்றைக்கும் போற்றப்படவேண்டிய மிகப்பெரும் ஆளுமைகளில்ஒருவர்.
"வடு" எனும் அவரின் அனுபவ நூல் இந்த சமுதாயம் ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு செய்த மாறாத வடுவை பறைசாற்றக்கூடியது.கே.ஏ. குணசேகரன் என்றும் வரலாற்றில் வாழ்ந்துகொண்டேயிருப்பார்
தங்கர்பச்சன்

No comments:
Post a Comment