பிரபல நாட்டுப்புறக் கலைஞர், பாடகர் கே.ஏ.குணேசகரன் மரணம்
புதுச்சேரி: பிரபல நாட்டுப்புறவியல் ஆய்வாளர், கலைஞர், பாடகரான டாக்டர் கே.ஏ.குணசேகரன் இன்று புதுச்சேரியில் மரணமடைந்தார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத் துறையின் தலைவராக பணியாற்றி வந்தவரான குணசேகரன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். கம்பீரமான குரலில் உரத்துப் பாடக் கூடிய குணசேகரன், நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து விரிவான ஆய்வுகள் பல செய்தவர் ஆவார். தன்னானே என்ற இசைக் குழுவையும் இவர் நடத்தி வந்தார். உடுக்கையை அடித்தபடி இவர் உரத்த குரலில் பாடும்போது எட்டுத் திக்கும் அதிருவது போன்ற உணர்வு நமக்குள் ஏற்படும். சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்தவர் குணசேகரன். மதுரை தியாகராஜர் கல்லூரியில் படித்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்ஏ முடித்த இவர் முனைவர் பட்டத்தை நாட்டுப்புறப் பாடல்களில் பெற்றார். சென்னை தரமணி, உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்துள்ளார். பல நாடகங்களையும இவர் இயற்ரறியுள்ளார். இதில் சத்தியசோதனை என்ற நாடகம் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் முதுகலைப் பாடத் திட்டத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர் குணசேகரன். ஒடுக்கப்பட்ட, பாட்டாளி, தலித் சமூக மக்களுக்காக குரல் கொடுத்து வந்தவர் குணசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் குணசேகரன், நாடகம், நாட்டுப்புற இலக்கியம், நாட்டுப்புற இசை, நவீன நாடகம், தமிழ் இலக்கியம் என பரந்துபட்டு செயல்பட்டவர் ஆவார். பல்வேறு தலைப்புகளில் 30 நூல்களை இவர் எழுதியுள்ளார். மற்றவர்களுடன் இணைந்து 10 நூல்களை எழுதியுள்ளார். இவரால் தொகுக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 30 ஆகும். மொத்தமாக 60 நூல்களை இவர் பதிப்பித்துள்ளார்
தற்ஸ்த்தமிழ்

No comments:
Post a Comment