Saturday, 23 January 2016

இவர் ஒரு நிகழ்கலைக் கலைஞர்.

தமிழகத்தின் நாட்டுப்புற இசைக் கலைஞர்:
தோழர்
"கே.ஏ. குணசேகரன்" மறைவு.
😓😓😓😓😓😓😓
இவர் ஒரு நிகழ்கலைக் கலைஞர்.
"தேவதை" -என்ற நாசர் இயக்கிய படத்தில் , குணசேகரன் திரையில் தோன்றி போது நான் அடைந்த மகிழ்ச்சி அடடா! அளவிட முடியாதது.
அந்த புரசைவாக்கம் அபிராமி திரையரங்க "ஸ்பீக்கர் பாக்ஸ்" எல்லாம் அன்று அலறித்துடித்து ஆனந்தம் கண்டன.
அந்த "நொடி" யை என்னுடைய வெற்றியாக கொண்டாடினேன்.
நண்பர் "கணையாழி" ரியாஜ் அஹமதின் ஓட்டேரி அறைக்கு வந்த போது ( 1991) அவரை நேரில் பார்த்தேன்.
அவர் பேச பேச கேட்டுக் கொண்டே இருந்தேன்.
அப்பொழுது அவர் பாடிய
"ஆக்காட்டி"
"ஆக்காட்டி"
எங்கே ? எங்கே ? முட்டையிட்டே,
எங்கே ? எங்கே ? முட்டையிட்டே,
- என்ற
நாட்டுப்புற ஒப்பாரிப் பாடல் இன்றும் என் காதுகளில் எதிரொலித்து கொண்டுள்ளது.
ஆனால்
நான் அவரிடம்
ஒரு வார்த்தையும் பேசவில்லை.
"செவிக்கு உணவு" என்பது தானே நமது கொள்கை.
நமது
"வண்ணப்பலகை" அந்த மக்கள் கலைஞனை மனதில் ஏந்திக்கொள்கிறது.
📝
ஷரீப். அஸ்கர் அலி

No comments:

Post a Comment