Friday, 22 January 2016

பேராசிரியர்.கே.ஏ.குணசேகரன்

நாட்டுப்புற இசைக்கலைஞரும்,தன்னானே நாடகப்பயிற்சி பட்டறை ஸ்தாபகரும் புதுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கரு.அழ. குணசேகரன் அவர்களின் மறைவு தமிழ் நாடக உலகிற்கே பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும்.
தலித் இனத்தின் விடியலை நாடகக்கலை,இசைக்கலைக்கூடாக தேட பாடுபட்ட மகான்
சாதி,ஏற்றத்தழ்வு,தீண்டாமை,அடக்குமுறைகள்,சாதியல்சிந்தன்சிகள் என்பவற்றை தனது படைப்புக்கள் மூலமாக தகர்த்தார்
கே.ஏ.குணசேகரனின் "தொட்டிலில் தொடங்கி" எனும் நாடகம் இ.குகநாதன் அவர்களின் நெறியாழ்கையில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் ஆற்றுகை செய்யப்பட்டது.
முழுக்க முழுக்க பெண்ணியம் சார் குரலாகவே இந் நாடகம் காணப்படுகின்றது.
அரிச்சந்திர புராணத்தில் வருகின்ற சந்திரமதி பாத்திரத்தினையும் தற்கால வாழ்வில் பெண் அடக்குமுறை வகை மாதிரிகளையும் தேர்ந்தெடுத்து ஒரேதளத்தில் இருவேறு காலப்பகுதியில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை எடுத்தியம்பும் வகையில் குறியீட்டம்சங்கள் கலந்து கட்டமைக்கப்பட்டிருப்பது பேராசிரின் ஆளுமையினை வெளிப்படுத்துகின்றது.
பெண்கள் பிறந்தது முதல் இன்று வரை அடிமைப்பட்டும்,அடக்கப்பட்டும்,ஒடுக்கப்பட்டு,வன்முறைக்குட்பட்டுகொண்டே இருக்கின்றனர் என்பதோடு ஆண் ஆதிக்கத்தின் குரலினையும் எடுத்தியம்புகின்றது...பேராசிரியர் மறைந்திருந்தாலும் அவரது படைப்புக்கள் என்றும் தலித்தியம் சார் குரலாகவே ஒலித்துக்கொண்டிருக்கும்
வன்னியசிங்கம் வினோதன்

No comments:

Post a Comment