ஆக்காட்டி ஆக்காட்டி எங்கெங்கே முட்டையிட்டே..
கே.ஏ.குணசேகரனின் நின்று போகாத பாட்டு ..
ஹெச்.ஜி.ரசூல்
கே.ஏ.குணசேகரனின் நின்று போகாத பாட்டு ..
ஹெச்.ஜி.ரசூல்
இன்றைய பொழுது மனதுக்கு மிகவும் சஞ்சலத்தையும் துயரத்தையும் தருவதாக அமைந்துவிட்டது. நாட்டுப்புற பாடல்களால், நம் இதயங்களை சுண்டியிழுத்து இசையால் கட்டிப்போட்ட இனிய தோழர் கே.ஏ.குணசேகரன் மறைந்துவிட்டார்.அம்மா பாவாடை சட்ட கிழிஞ்சு போச்சுதே, பள்ளிக்கூட பிள்ளையெல்லாம் கேலி பேசுதே என அவர் பாடும் குரலில் கூட்டமே உருகிவிடும்.ஒத்தையிலே போறியளே அத்தமக புள்ளே என தெம்மாங்கை அவர் வீசும் போதும், ஆக்காட்டி ஆக்காட்டி எங்கெங்கே முட்டையிட்டே என கூடு தேடி தவித்த போதும், வெள்ளைக்காரங்க ஆண்ட போதும் அரிசனங்க நாம்.. இப்ப டில்லிக்காரங்க ஆளும் போதும் அரிசனங்க நாம் என தலித்திய வாழ்வை பாடிய போதும் தோழரின் நாட்டுப்புற பாடல் சார்ந்த விடுதலைக்குரல் தமிழகத்தின் தெருவீதிகளில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.
கே.ஏ.ஜி அவர்கள் தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற விழாக்களில் , முகாம்களில் பலமுறை கலந்து கொண்டவர். ஆகஸ்ட் 15 தோறும் தக்கலையில் நடைபெறும் விழாவில் இரு முறை கலந்து கொண்டிருக்கிறார். செம்மணி கலைக்குழுவோடு இனைந்து அவர் பொதுவெளியில் நடத்திய பலியாடுகள் நாடகம் , பாடல்கள் இந்துத்துவ சாதீய அதிகாரங்களுக்கு எதிராக ஓங்கி ஒலித்தபோது பிரச்சினைகள் ஏற்படாமல் இல்லை. பிறிதொருதடவை அவர் கலந்து கொண்ட விழாவில் எனது குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறார். கன்னிவாடி பச்சைநிலா, மறைந்த கவிஞர் கந்தர்வன் என பல கவிஞர்கள் அவரது கிராமப்புற இசைக்கு பாடல்கள் தந்திருக்கிறார்கள். அந்தவகையில் ஒரு இசைப் பயிற்சிமுகாமில் வானம் விரிஞ்சிருக்கு எனக்கு சிறகு இல்லையடி.. சீவி முடிச்சிகிட்டு உள்ளிட்ட ஓரிரு பாடல்களும் எழுத சந்தர்ப்பம் நேர்ந்தது . தோழர் வெளியிட்ட அக்னிஸ்வரங்கள் பாடல் தொகுப்பிலும் இவை பெயரின்றி இடம் பெற்றுள்ளன.
தோழர் கே.ஏ.ஜி யின் இசை ஒலிப்பேழை தொகுப்பு தந்நானே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், தோழர் மகேந்திரன், பெ.அன்பு மற்றும் தோழர்கள்முயற்சியில் வெளிவந்தது. தொடர்முயற்சியாக மண்ணின்பாடல்கள் கலை இலக்கியப்பெருமன்ற பாடல் இசைப்பேழையும் வெளிவந்தது. இந்த இசைப்பேழை பின்னணி இசைச்சேர்ப்பின் நமது ஆன்றோ. எம். அப்பாஜி முக்கிய பங்கு வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.கே.ஏ.ஜி யைப் பற்றி நினைக்க நினைக்க ஊற்றாக நினைவுகள் பெருகிக் கொண்டே இருக்கிறது..அதில் கண்ணீரும் கலந்திருக்கிறது.
கே.ஏ.ஜி யின் எழுத்துக்கள்
நாட்டுப்புறப்பாடல்களும், நாடகங்களும் கே.ஏ.ஜி.யின் உயிர் மூச்சாகவே இருந்தது. நாட்டுப்புற கலை வடிவங்களை நிகழ்த்துகலை வடிவங்களாக உருமாற்றியவர்..தனது நெடிய பயணத்தில் தலித் அரங்கியலை வடிவமைத்துக் காட்டியவர். திரைத்துறையிலும் நடிகர் நாஸரின் தொடர்போடு தேவதையில் பாடல் எழுதி பாடி தன்னை வெளிப்படுத்திக்காட்டியவர்.தங்கர்பச்சானின் அழகி படத்திலும் கதாபாத்திரத்தில் நடித்து பரவலான அறிமுகத்தை பெற்றவர்.

பேராசிரியர் நா.வானமாமலை அடித்தள உழைக்கும் மக்களின் நாட்டுப்புற பாடல்களை,வாய்மொழி இலக்கியத்தை விளிம்பிலிருந்து மையத்திற்கு கொண்டு வரப் போராடினார்.அப்பாடல்களை தொகுப்பாக்கி இலக்கியமாக்கினார். அந்த திசைவழியில் கே.ஏ.ஜியின் 2003 இல் வெளிவந்த தொட்டில் தொடங்கி தொடுவானம் வரை நூல் எழுபது எண்பதுகளில் பதிவு செய்யப்பட்ட நாட்டுப்புறப்பாடல்களை அப்பாடல்களைப் பாடிய கலைஞர்களின் விவரத்தொகுப்புகளோடு வெளிக் கொன்டு வந்திருந்தது.
2004 இல் வெளிவந்த தொடு என்ற நூல் நான்கு நாடகங்களின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் 'மாற்றம்', 'மழி', 'தொடு', 'கந்தன்-வள்ளி' என்னும் நான்கு நாடகங்கள் இடம் பெறுகின்றன. அரங்குகளிலும், தெருமுனைகளிலும் நிகழ்த்த சாத்திய முள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் அரங்கமாக இந்த நாடகங்கள் வெளிப்பட்டன.
2005 இல் வெளிவந்த இசைநாடகமரபு நூல் ஒன்பது கட்டுரைகளை உள்ளடக்கிய ஒரு படைப்பாகும்.தமிழகத்தின் சிலப்பதிகாரத்தின் இசைநாடகமரபு தேசி மற்றும் மார்க்கம் ஆகிய இருமரபுகளை எவ்வாறு கையாளுகிறது என்பது விளக்கமுறுகிறது. இருவகை கூத்துகளில் தேசி என்பது தமிழ்பகுதியில் உருவான ஆடல்மரபாகவும், மார்க்கம் வடபகுதியில் உருவான வடுக மரபாகவும்பொருள் கொள்ளப்படுகிறது.மேற்கத்திய நாடகப்பாங்கு, பம்மல்சம்மந்த முதலியாரின் நாடக முறையியல் ,கர்நாடக, இந்துஸ்தானி, ஐரோப்பிய இசைவடிவங்கள் என்பதாக இக்கட்டுரைகள் பேசுகின்றன.

2008 இல் வெளிவந்த நாட்டுப்புற மண்ணும் மக்களும், 2011 இல் வெளிவந்த பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்போன்ற நூல்களும் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவை.
கே.ஏ.குணசேகரன் ஆய்வியல் எழுத்திலிருந்து மாறுபட்ட தன்வரலாற்று நாவல் வடு 2011 இல் வெளிவந்தது.சிறு பருவ வாழ்க்கையிலிருந்து தொடங்கி கல்லூரி வாழ்வுவரையிலான இளையான்குடி, மாராந்தை,கீரனூர் உட்பட்ட கிராம வாழ்வில் பட்ட சாதீய அவலங்களின் ஆறாத ரணங்களின் சுயவரலாற்று பதிவு வடுவில் இடம் பெற்றிருக்கிறது.

2012 இல் நாட்டுப்புற இசைக்கலை பற்றிய நூலும், தலித்தியம் அரங்கியலும் அரசியலும் படைப்புகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான களத்தை நோக்கிய பண்பாட்டுச் செயல்பாடாக அமைந்தது. தமிழகம் முழுதும் நாடக கலைஞர்களை, நாட்டுப்புற பாடகர்களை வழிநடத்திய கே.ஏ.ஜி பிறர் ஏறிச் செல்வதற்கான ஒரு ஏணியாகவே எப்போதும் இருந்திருக்கிறார். இந்த ஏணியில் கால்பதித்து ஏறி திரையுலகில் சின்னப்பொண்ணு என பாடக பாடகிகளாக பரிணமித்தவர்கள் பலருண்டு.
பிறகாலத்தில் சங்க இலக்கியம் சார்ந்த தலித்திய நோக்கு கொண்ட புத்தாக்க உரையாசிரியாக வெளிப்பட்ட கே.ஏ.ஜி பதிற்றுப்பத்து மூலமும் ஆராய்ச்சிப்புத்துரையும். 2015 இல் பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப்புத்துரையும் வெளிவந்துள்ளது. பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பேசும் தமிழக மலையின மக்கள் உள்ளிட்ட கே.ஏ.ஜி யின் பெரும்பாலான முக்கிய நூல்களை நியூசெஞ்சுரிபுத்தக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
கே.ஏ.குணசேகரனாக அறியப்பட்ட தோழர் தன்னை தலித் அடையாளத்தோடும், மார்க்ஸிய அடையாளத்தோடும் மட்டுமல்ல தமிழ் அடையாளத்தோடும் இணைத்துக் கொண்டதின் வெளிப்பாடுதான் தன் பெயரை கரு.அழ. குணசேகரனாக மாற்றிக் கொண்ட நிகழ்வு எனச் சொல்லலாம்
No comments:
Post a Comment