வாகான ஆலமரம்.. ஆலமரம் .. சரிந்ததே!
மதியமே தகவல் தெரிந்துவிட்டது. வீட்டுக்குவந்த சுகிர்தராணிதான் தகவல் சொன்னது. தொடர்ந்து வேலைகள். முடித்துவிட்டு காலையில் புதுவை கிளம்ப வேண்டும் என்பதால் உடனடியாக பதிவிட முடியவில்லை.
1980 களின் தொடக்கத்தில் கே. ஏ. குணசேகரன் பழக்கம் அவரது குரல் மூலமாக அறிமுகம். கே. ஏ. ஜி, கோட்டைச்சாமி, இன்னும் அழகரிசாமி வாத்தியார் என கே.ஏ. ஜி குழுவினர் கரிசல் நிலத்தின் திசைகள் அதிர அவர்கள் குரல் அத்துவான வெளி கடந்து விண்ணில் கலக்கும். அதற்கு நான் அடிமையானேன். ரெட்டை மேளமும், நாயணமும் நாட்டார் சிந்து மெட்டுகளை வண்ண வண்ணமாக வழங்கும். எங்கெல்லாம் அவர்கள் குழு பாடியதோ அங்கெல்லாம்.. அவர்கள் கூடவே அலைந்தேன். வாகான ஆலமரம் பாடல்தான் எனக்கு கே. ஏ. ஜியின் அடையாளம்.
மனுசங்கடா, ஒத்தமாடு செத்துப்போச்சு போன்ற பாடல்களை அவரிடம் இருந்து கற்றோம். சிருஷ்டி நாடகக் குழுவில் அப்பாடல்களை பாடினோம்.
இன்று அவர் மரணச் செய்தி உலுக்கி விட்டது.
தமிழ் நவீன நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலித்தவர். தோழருக்கு வீர வணக்கம்!

அப்பண்னசாமி
No comments:
Post a Comment