காலமாகிய நாட்டுப்புறக் கலைஞர் கே. ஏ. குணசேகரன் அவர்களின் கவிதை ஒன்று
வார்த்தைச் சாபம்
கோழியக் களவாண்ட சிறுக்கிகளா
ஆட்டைத் திருடிய கோணப்பயலுகளா
கருக்கறுவாளை தூக்கிக்கிட்ட எடுபட்ட பயகா
மரத்தை வெட்டி சாய்ச்ச மானங்கெட்ட ஜென்மங்களா......
.....
.....
சேரிப் பெண்களின் வார்த்தைச் சாபங்கள்
நெத்தம் நெத்தம்
விண்ணை முட்டி ஊர் முழுக்க
எதிரொலித்த பின்னால்தான்
சூரியன் பயந்து தலை நீட்டுவான்
ஆட்டைத் திருடிய கோணப்பயலுகளா
கருக்கறுவாளை தூக்கிக்கிட்ட எடுபட்ட பயகா
மரத்தை வெட்டி சாய்ச்ச மானங்கெட்ட ஜென்மங்களா......
.....
.....
சேரிப் பெண்களின் வார்த்தைச் சாபங்கள்
நெத்தம் நெத்தம்
விண்ணை முட்டி ஊர் முழுக்க
எதிரொலித்த பின்னால்தான்
சூரியன் பயந்து தலை நீட்டுவான்
எந்த சிறுக்கி எடுத்தவள்
எந்தப் புடுங்கி அமுக்கினவன்
எடுத்த சனம்
எடுத்த மாதிரி
கொண்டாந்து வெக்கணும்!
இல்லே...
எந்தப் புடுங்கி அமுக்கினவன்
எடுத்த சனம்
எடுத்த மாதிரி
கொண்டாந்து வெக்கணும்!
இல்லே...
காளி கோயில்ல
காசு வெட்டிப் போடுவேன்
காளி கேப்பா...
வயிறு வீங்கும்
கால் கை விளங்காது
கிறுக்கொண்டு போவே
பீயும் சோறும்
பெரட்டித் தின்னுவே
ஒன் வீடு பத்திக்கிட்டு எரியும்
ஒன் சாதி சனம் உருப்படாது
மண்ணை அள்ளித் தூத்துப்புட்டேன்
மண்ணாப் போவே
வார்த்தைப் பிரம்பாலே அடிச்சா சாவுதான்!
காசு வெட்டிப் போடுவேன்
காளி கேப்பா...
வயிறு வீங்கும்
கால் கை விளங்காது
கிறுக்கொண்டு போவே
பீயும் சோறும்
பெரட்டித் தின்னுவே
ஒன் வீடு பத்திக்கிட்டு எரியும்
ஒன் சாதி சனம் உருப்படாது
மண்ணை அள்ளித் தூத்துப்புட்டேன்
மண்ணாப் போவே
வார்த்தைப் பிரம்பாலே அடிச்சா சாவுதான்!
எங்க வரலாற்றை மறச்சது யாரு
எங்க கலைகளை ஒதுக்கி வச்சது யாரு
எங்க மொழியத் தள்ளி வச்சது யாரு
எங்க நிலத்தைப் புடுங்கினவன் யாரு
எங்க உரிமையப் பறிச்சவன் யாரு
எங்கள மதிக்காத ஈனப் பயக யாரு
எங்க கலைகளை ஒதுக்கி வச்சது யாரு
எங்க மொழியத் தள்ளி வச்சது யாரு
எங்க நிலத்தைப் புடுங்கினவன் யாரு
எங்க உரிமையப் பறிச்சவன் யாரு
எங்கள மதிக்காத ஈனப் பயக யாரு
எடுத்த சனம்
எடுத்த மாதிரி
கொண்டாந்து வெக்கணும்!
இல்லே......
எடுத்த மாதிரி
கொண்டாந்து வெக்கணும்!
இல்லே......
தீபச்செல்வன் பார்த்திபன்
No comments:
Post a Comment