Friday, 22 January 2016

மறைந்த முனைவர் கே ஏ குணசேகரன் அவர்களுக்கு மௌன வணக்கம்! கரு. அழ. குணசேகரன் (12 மே 1955 - 17 சனவரி 2016)

மறைந்த முனைவர் கே ஏ குணசேகரன் அவர்களுக்கு மௌன வணக்கம்!
கரு. அழ. குணசேகரன் (12 மே 1955 - 17 சனவரி 2016)
சிலம்புச் சங்கத்துடன் தோழமை உறவைப் பேணியவரும் எமக்கான அரங்காற்றுகைகளுக்கு தகுநல் ஒத்துழைப்புகளை வழங்கியவருமான முனைவர் கே ஏ குணசேகரன் அவர்களது இறப்புச் செய்தி மிகுந்த வேதனையுடன் எமை வந்தடைந்தது.
பொங்கல் நிகழ்வை பாரீசில் 'தமிழர் திருநாள் 2016' எனவாக பத்தாவது தடவையாக அரங்காற்றுகை செய்த வேளையில் இத்துயரச் செய்தி எமை வந்தடைந்தது.
சென்ற 15.01.2011 தமிழர்திருநாள் நிகழ்வரங்கில் எமது சிறப்பு அதிதியாகக் கலந்து எமது புலம்பெயர் சிறார்களுக்கு அகரம் எழுதிய காட்சிகளையும் அவர் பங்கேற்ற சிறப்பு நிழற்படங்களையும் கனத்த மனதுடன் நினைவேந்தலாகப் பகிர்கிறோம்.
கவிஞர் இன்குலாப் அவர்களது "மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா..!" கவி வரிகளை பட்டி தொட்டி எங்கும் செவகளூடாக மண்டைக்குள் அனுப்பிய சிறப்புக் குரலோன் முனைவர் கே ஏ குணசேகரனுடையது.
காலம் கடந்தும் பயணிக்கும் வாழ்வுப் பதிவை நிகழ்த்திய சிறப்பான வாழ்வையுடையவர். இவரது சிறப்பு அழகியல் பாவத்துடன் வெளிவந்த 'ஏ... ஆட்காட்டி... ஆட்காட்டி .. எங்கெங்கு முட்டையிட்டாய்....!" பாடல் எமது செவிக்குள் ஒலித்த வண்ணமே இருக்கிறது. சிறப்பான நாட்டுபுறக் கலை தகைசார் கல்வியாளர். எமக்கான தனித்துவமான கலைகளை பல்கலைக் கழக மேற்படிப்பில் முறைப்படி கற்க வழிகோலியவர்களில் இவரது பங்களிப்பும் முக்கியமானது.
தோழருக்கு எமது இறுதி வணக்கம்!!
சிலம்பு அமைப்பு பிரான்ஸ்

No comments:

Post a Comment