Friday, 22 January 2016

மாபெரும் கலைஞனுக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் அஞ்சலிகள்

மாபெரும் கலைஞனுக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் அஞ்சலிகள்
பாண்டிச்சேரி பல்கலைக்கழக (இந்தியா) நாடகத்துறைத் தலைவர் முனைவர் கே.ஏ.குணசேகரன் மாபெரும் நாடகக் கலைஞனுக்காக அஞ்சலிக்கின்றோம்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக (இந்தியா) நாடகத்துறைத் தலைவர் முனைவர் கே.ஏ.குணசேகரன் அவர்கள் தமிழ் நாட்டில் முனைப்புப் பெற்று வரும் தலித் இயக்கங்களுடன் தன்னை அடையாளப்படுத்தி வேலை செய்பவர். தலித் மக்கள் வாழ்வியல் பற்றிய பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார்.
அண்மையில் மனுசங்கடா மண்ணின் பாடல்கள் தன்னானே போன்ற தலித் பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழைகளை வெளியிட்டுள்ளார். தன்னானே குழுவுடன் இணைந்து வேலை செய்பவர்.இவரது 'பலி ஆடுகள்' நாடகம் மிக வரவேற்பைப் பெற்ற நாடகமாகும். இத்தோடு 'அறிகுறி' எனும் தலித் அரங்காற்றுகையையும் நிகழ்த்தியிருக்கிறார்.
'அறிகுறி' நாடகம் மேடை அருவருப்பாகக் காணப்பட்ட காட்சிகளை மேடையில் இட்டு அரங்க மறுமலர்ச்சிக்கு வித்திட்டதாக அறிகிறோம். இதனோடு புராணக் கதைகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தி பல நாடகங்களை குணசேகரமவர்கள் படைத்துள்ளார். பெண்சார்ந்த சிந்தனையுடன் அடக்கப்பட்டோரின் ஆவேசக்குரலாக இந்நாடகங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. சமகாலத்தின் நிலைமைகளை வழிவழியாக வந்த மரபுகளின் தொடர்ச்சியாக இனங்கண்டு குறிப்பாக இந்துதத்துவ மேலாண்மை மீது கேள்வி எழுப்பும் ஒரு போக்கை இவரது நாடகங்களில் காணமுடிகின்றது. பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு நாடகம் தொழில்முறையான பெண் நடிகைகள் மீது காணப்படும் பாலியல் ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறது.
இந்நாடகம் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. வள்ளி திருமணம் நாடகம்சத்திய சோதனை நாடகம் என்பன இவரது மறுவாசிப்புச் சிந்தனையோடு மேடையேற்றப்பட்ட நாடகங்கள் ஆகும். மேலும் தலித் அரங்கியல் என்ற தலைப்பிலான அரங்கக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றையும் நூலாக வெளியிட்டுள்ளார்.
இவரது ஆத்மா சாந்தி அடைய புத்தாக்க அரங்க இயக்கத்தின் சார்பில் இறைவனை பிராத்திக்கிறேன்

No comments:

Post a Comment