Saturday, 23 January 2016

அஞ்சலி

நாட்டுப்புறப் பாடல்கள் என்றால் பெரும்பாலான தமிழர்களுக்கு விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் தான் ஆரம்பப்புள்ளியாகத் தெரியும் .ஆனால் அதற்கு முன்னாலே நாட்டுப்புறப் பாடல்களை தமிழகமெங்கும் பாடித் திரிந்தவர் கே.ஏ. குணசேகரன் .சிவகங்கை மண்ணைச் சார்ந்தவர் . இவருக்குப் பின்னாடி வந்தவர்கள் தான் புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்கள் . இன்குலாப் பின் மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா பாடலை கே. ஏ. குணசேகரன் பாடிக் கேட்க வேண்டும்
தமிழர்களின் நாட்டார் கலைகளை இருபதாம் நூற்றாண்டில் தூக்கிச் சுமந்தவர்
ஆழ்ந்த அஞ்சலிகள்

புரட்சி என்ற சொல் தமிழகத்தில் மலினப்பட்டுப் போனது போல் கலகக்காரன் என்றோரு சொல் இங்கு முகநூலில் வீணாய்ப் போய்க்கொண்டு இருக்கிறது..
உண்மையிலேயே கலகக்காரன் என்று சொல்ல வேண்டுமானால் இன்று அமரரான நாட்டுப்புற கலைஞன் முனைவர் கே.ஏ.குணசேகரன் அவர்களைச் சொல்ல வேண்டும்

அ.வெற்றிவேல்

No comments:

Post a Comment