காலத்தின் துயரம் இது....
-------------------------------------
-------------------------------------
தோழர் கே.ஏ.குணசேகரன் உடலை சற்று முன்பு பார்த்து வந்தேன். ஒரு மகத்தான கலைஞனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன். அவரோடு இணைந்து எத்தனை செயல்பாடுகள். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டிய தலித் எழுச்சிக்கு அவரின் இசையும் குரலும் அளப்பறிய பங்காற்றின. 90களில் நாங்கள் நடத்திய அத்தனை நிகழ்ச்சி்யிலும் அவரின் குரல் ஒலிக்கத் தவறியதில்லை. சிறுநீரகம் பழுதாகி அவர் உடல்நிலை மோசமாக இருந்த சூழ்நிலையில் பாபுவிடம் அவரைப் பார்க்க வேண்டுமென சொன்னேன். பாபு அவரிடம் சொல்லி இருப்பார் போல. அவர் 'சுகுமாரன் வந்தால் அவருடன் மார்க்ஸ் வருவார்' என்று சொல்லி இருக்கார். கடைசியில் அவரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. காலத்தின் துயரம் இது. அவர் உடல் கிடத்தப்பட்டிருக்கும் அவரின் வீட்டின் முன்னே பறை இசைக் கலைஞர்கள் கண்ணீர் மல்க ஆடிக் கொண்டே இசைத்தார்கள். தன் இசையால் ஒரு சமூகத்தையே எழுந்திட செய்தவர் குணசேகரன். பறை அடித்தவர்கள் குணசேகரன் எழுந்து வந்துவிட மாட்டாரா என்று அடித்தது போலிருந்தது. ஒரு இசைக் கலைஞனுக்கு இதைவிட என்ன அஞ்சலி செலுத்திவிட முடியும்
சுகுமாரன் கோவிந்தராசு
No comments:
Post a Comment