Friday, 22 January 2016

இளகிய மனம்-------அதற்குள் இரும்பான உறுதி,

இளகிய மனம்-------அதற்குள் இரும்பான உறுதி,
தொலைக்காட்சி நிலையத்திலிருந்து வெளியேறிய குணசேகரன்
--------------------------------------------------------------------------------------------
நண்பர் குணசேகரன் இன்று நம் மத்தியில் இல்லை.
ஆனால் அவர் நினைவுகள் நம்மோடுள்ளன
.நாம் இறக்கும் வரை அவை நம்மோடு இருக்கும்.
நினைவுகளின் வலிமை அது.
தனியே இருக்கும்போது,
நடக்கும்போது
படுக்கும்போதெல்லாம்
எனது மனதெலாம் நிறைத்துக்கொண்டு நிற்கிறார்
குணசேகரன் என்ற அந்த மனிதர்.
அண்மைக்க்காலமாக அவர் பற்றிப் பலர்
எழுதும் குறிப்புரைகளை வாசிக்கிறேன்.
உயிரோடு இருந்த குணசேகரனை விட இறந்த குணசேகரன் வலிமை வாய்ந்தவராகத் தெரிகிறார்.
அவர் பற்றிப் பிறர் எழுதும் சில குறிப்புகள்
ஆச்சரியமூட்டுகின்றன
.அவரின் பலபக்கங்கள் நம்முன் விரிகின்றன
தாம் வரித்த கொள்கைகளை மற்றவர்களைப் பேச வைக்கிறார்
.மற்றவர்களின் நினைவுகளில் புகுந்துகொண்டு அவர்களைத் தொல்லைப் படுத்துகின்றார்.
நண்பர்களைத் துயரத்தில் ஆழ்த்துகின்றார்.
நித்திரை கொள்ள விடுகிறாரில்லை
ஒரு தொலைக்காட்சி நிலைய அழைப்பின் பேரில் பறையைக் கக்கத்தில் இடுக்கியபடி தொலைக் காட்சி நிலயத்திற்கு குணசேகரன் போனாராம்.
பறையைக் கக்கத்தில் இடுக்கியபடி வரும் இவர், அவர்களுக்கு வினோதமானவராகத் தெரிந்திருக்கக் கூடும்
தொலைகாட்சி நிலையத்தார், கிராமிய இசைக் கலஞராக, நாட்டுப்புறப் பாடகராக மட்டுமே இவரைப் பார்த்தார்கள்
.நாட்டுப் புற இசைப்பாடலை,
அதுவும் சுகமான பாடல்களை கேட்க,
ஒளிபரப்ப காத்திருந்தனர்.
பறை இசைத்தபடி அவர் பாடத் தொடங்கியதும்
அவர்கள் அதிர்ந்தனர்.
பறையை அவர்கள் ஒரு இசைக் கருவியாக
கனவிலும் கருதவில்லை.
தமிழரின் புராதன இசைக்கருவி பறை
என அறிந்தவர்களில்லை அவர்கள்.
தமிழ்மண்ணின் இசைப்புல வரலாறு அறியாதவர்களாதலால், குணசேகரன் பறைஇசைத்துப் பாடத் தொடங்கியதும், இது அனுமதிக்கப்படுவதில்லை என எதிர்ப்புக் காட்டினர்.
வாய்ப்பாட்டு மட்டுமே பாடுமாறு கேட்டுக் கொண்டனர்.
” பறை இசைக்காமல் நாம் பாடுவதில்லை”
என்றுகூறிவிட்டு தொலைக்காட்சி நிலையத்திலிருந்து பறையைக் கக்கத்தில் இடுக்கியபடி வெளியேறினாரம் கே.ஏ. குணசேகரன்.
இப்படி ஒரு அனுபவத்தை ஒருவர் குறிப்பிட்டிருந்தார்
“என் பறைவாத்தியத்தோடு என்னை ஏற்றுக்கொள் இல்லாவிட்டால் உன்னை நான் ஏற்றுக் கொல்ள மாட்டேன்”
இப்படிச் சொல்ல ஒரு தனி ஆளுமை வேண்டும்
குணசேகரன் இறந்த செய்தி கேள்வியுற்று எனது முகநூலில் அவர் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்
குழந்தை உள்ளம்---- அதற்குள் கொதிக்கும் அனல்,
இளகிய மனம்-------அதற்குள் இரும்பான உறுதி,
வெட்டப்பட்ட பட்ட சிறகுகள்--- -விண்தாண்டிப் பறக்கும் எத்தனம்
எளிமையான பேச்சு- ----------இறுக்கமான கொள்கை.
இந்த நிகழ்வு என் கூற்றுகளை மெய்ப்பிப்பதாக உள்ளது
இதுபோல பல அனுபவங்களை எனக்கு அவர் கூறியுள்ளார்
மௌனகுரு

No comments:

Post a Comment