Friday, 22 January 2016

கே.ஏ.குணசேகரன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் . . .

கே.ஏ.குணசேகரன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் . . .
நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் நிகழ்த்துக் கலைகளின் ஆளுமையாக விளங்கிய தோழர் கே.ஏ. குணசேகரன் மறைவுக்கு BSNLEU சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. கே.ஏ.குணசேகரன் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைக்குழுக்கள் மற்றும் இசைக்குழுக்களின் தொடக்க பள்ளியாக இருந்தவர். இன்றும் தமிழகத்தில் பல மேடைகளில் முற்போக்குக் கருத்துக்களை இசைக்கும் கரிசல் குழுபோன்றவை அவரது வார்ப்புகளேயாகும். தமுஎகசவின் இசைப் பயிற்சி முகாம்களில் பங்கேற்று பயிற்சி அளித்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டுப்புறப்பாடல் மெட்டுகளில் முற்போக்குக் கருத்துக் களைக் கொண்டு செல்வதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர். நாடகத்துறை சார்ந்த 30க்கும் அதிகமான நூல்களையும் 500க்கும் அதிகமான கட்டுரை களையும் எழுதியுள்ள ஆற்றல் மிக்கபடைப் பாளியாகவும் திகழ்ந்தவர். நடிப்புக் கலையிலும் தேர்ச்சிபெற்றவர். பல திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார்.உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர். புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளி என்ற பிரிவின் துறைத்தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த குணசேகரன் மரபு வழி நாடகங்களான “பவளக்கொடி”, “வள்ளி திருமணம்”, “அரிச்சந்திர புராணம்” ஆகிய வற்றை மறுவாசிப்பு செய்து தற்காலப்படுத்தி பெண்கள் விடுதலைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்கும் பயன்படுத்தியவர்.ஒரே நேரத்தில் இரண்டுமேடை இருப்பது போன்ற புதிய உத்தியைக் கையாண்டு பழமையையும், புதுமையையும், ஒப்பிட்டும், வேறு படுத்தியும் காட்டியவர். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தலித் அரங்கியல் என்ற கோட்பாட்டை உருவாக்கி செயல்படச் செய்தவர் குணசேகரன்.புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தோடும் நெருக்கமாகப் பணியாற்றியவர். நாட்டுப்புற இசை மற்றும் நிகழ்கலை களுக்குக் காத்திரமான பங்களிப்பைச் செய்த குணசேகரனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
SOORIYAN at 08:19

No comments:

Post a Comment