கே.ஏ.குணசேகரன் எனும் மாபெரும் அரங்க ஆளுமை மறைந்தது... வீரவணக்கம்.
தமிழகத்தின் மாபெரும் அரங்க ஆளுமை, நாட்டுப்புற பாடல்களை மக்களிடையே கொண்டு சேர்த்தவர், நாட்டுப்புறக் கலை மரபை நவீன நாடக அரங்கில் கொண்டு சேர்த்து புது போக்கினை உருவாக்கியவர், தலித் நிகழ்த்துக்கலை அரங்கத்தை நிர்மாணித்தவர்களில் முதன்மையானவர், பேராசிரியர், மிகச் சிறந்த மக்கள் பாடகர். அவர் குரலெடுத்துப் பாடினால் கூடும் கூட்டத்தைப் பார்ப்பதற்கே பிரமிப்பாய் இருக்கும். தமிழாராய்ச்சி மையத்தின் தலைவராக, பாண்டிச்சேரி பல்கலை பேராசிரியர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் என சிறப்புகளைப் பெற்ற பேராசிரியர்.கரு.அழ.குணசேகரன் மறைந்தார் என்ற சேதி அதிர்ச்சியாய் இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேல் அவர் இணையற்ற மக்கள் கலைஞர். அவரோடு பயணித்த நாள்களை நினைக்க மனம் கனக்கிறது. ஆக்காட்டி பாடலை அவர் பாடினால் கண்கள் கலங்கும்.. கலங்கி இருக்கிறேன்.. அவரது குரல் உச்சநிலையில் ஒலித்தாலும் பிசிறில்லாமல் வசீகரிக்கும்.
மனுசங்கடா நாங்க மனுசங்கடா என்கிற பாடல் அவரது புகழ்பெற்ற பாடல்.. இடதுசாரிகளுக்கும் தலித் இயக்கத்தினருக்கும் அவரது இழப்பு பேரிழப்பு. மக்கள் கலையில் அவர் ஆற்றிய பணியிடத்தை இன்னொருவர் நிரப்புவது கடினம். மறைந்த கேஏஜி அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்த தெரிவித்துக்கொள்கிறேன்.
சன்னா
கபசெ-விசிக
கபசெ-விசிக
No comments:
Post a Comment