தோழர் நண்பர் என பல பரினமாக பழகிய எனது இனிய அன்பர் கே ஏ குணசேகரன் மறைவு செய்தி என்னை துடி துடிக்க வைத்துள்ளது ,
அவரோடு பழகிய நாட்கள் திரையாக மனதில் ஓடுகிறது ,
அவரோடு பழகிய நாட்கள் திரையாக மனதில் ஓடுகிறது ,
மும்பை செம்பூர் பைன் ஆர்ட்ஸ் யில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீராம் குழுமம் நடத்திய "கலை நிகழ்ச்சியை " தோழர் கே ஏ குணசேகரன் நடத்தினர் ,அவர் மும்பையில் தங்கிய அந்த நாட்களில் அவரோடையே தங்கி பழகிய நட்பு மறக்க முடியாதது ,தமிழகம் சென்ற பொது புதுவையில் அவரின் விட்டியில் தங்கி இருந்தது ,அவரோடு மாலையில் நடைபயற்சி சென்றது .என்றும் மறக்க முடியாதது .
இடதுசாரியாக இருந்துதோழர் பிறகு தலித்தியம் பேசியது வரை அவரோடு விவாதித்தது என நினைவு அலைகள் போகிறது, தோழருக்கு வீரவணக்கம்
இடதுசாரியாக இருந்துதோழர் பிறகு தலித்தியம் பேசியது வரை அவரோடு விவாதித்தது என நினைவு அலைகள் போகிறது, தோழருக்கு வீரவணக்கம்
காந்தக் குரல் தோழர் கே.ஏ.குணசேகரனுடையது
இன்குலாப்பின் "மனுசங்கடா.... நாங்க மனுசங்கடா.." பாடலை ஊரெங்கும் ஏன் உலகெங்கும் பரப்பியவர் அவர்.
இன்குலாப்பின் "மனுசங்கடா.... நாங்க மனுசங்கடா.." பாடலை ஊரெங்கும் ஏன் உலகெங்கும் பரப்பியவர் அவர்.
"ஆக்காட்டி ஆக்காட்டி" பாடலையும்
"அம்மா பாவாட சட்ட கிழிஞ்சு போச்சுதே" பாடலையும் அவர் பாட கேட்டுவிட்டு கண்ணீர் சிந்தாமல் யாரும் இருக்கமுடியாது.
"அம்மா பாவாட சட்ட கிழிஞ்சு போச்சுதே" பாடலையும் அவர் பாட கேட்டுவிட்டு கண்ணீர் சிந்தாமல் யாரும் இருக்கமுடியாது.
நாட்டுப்புறப் பாடல்களுக்கேயுரிய நெழ்வும் கம்பீரமும் கூடிய ஏற்ற இறக்கங்களுடன் வெளிப்படும் அவரது கணீர் குரலிசை, பாடல் வரிகளைச் சிதைக்காமல் வந்து செவிப்பறைகளில் மோதுவதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
கண்ணீர் வரவழைக்கும்
தனது குரலை நிறத்திக்கொண்ட கானக் குயிலுக்கு கண்ணீர் அஞ்சலி
தனது குரலை நிறத்திக்கொண்ட கானக் குயிலுக்கு கண்ணீர் அஞ்சலி
கதிரவன் மும்பாய்
No comments:
Post a Comment