தலித் கலை எழுச்சி நாயகன் கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கு
பத்மஸ்ரீ விருது வழங்கியிருக்க வேண்டும்!
தொல்.திருமாவாளவன் அஞ்சலி
~~~~~~~
புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத் துறைத் தலைவராயிருந்த முனைவர் கே.ஏ.குணசேகரன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். நாட்டுப்புற இசைக் கலைஞராக, நவீன நாடகத் துறையில் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக, தலித் கருத்தாளராகத் திகழ்ந்த கே.ஏ.குணசேகரன் உலகமெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழரிடையேயும் புகழ்பெற்றவர்.
தென் தமிழ்நாட்டில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து தனது விடாமுயற்சியால் கடும் உழைப்பால் சமூகத்தில் மதிப்புவாய்ந்த இடத்தை அடைந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின்பால் வற்றாத அன்புகொண்டவர். இடதுசாரி மேடைகள் அவரது குரலால் வீரியம் பெற்றன. தலித் கலையும் இலக்கியமும் அவரால் துடிப்புக்கொண்டு எழுந்தன. எந்தவிதமான எதிர்ப்புக்கும் அஞ்சாமல் தனது கருத்தில் உறுதியாக நிற்கும் பண்பு கொண்டவர். அவர் உடல் நலிவுற்ற செய்தி கேட்டு சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் அவரைச் சேர்த்து சிகிச்சைபெறச் செய்தோம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் நலமாகத்தான் இருந்தார். ஆனால் இப்படியொரு நிலை நேரிட்டுவிட்டது.
பேராசிரியராக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகப் பணிபுரிந்து கல்வியாளராகத் தனது முத்திரையைப் பதித்தவர். அவர் துணைவேந்தராக நியமிக்கப் பெறத் தகுதி பெற்றிருந்தும், அவரது பெயர் பலமுறை பரிந்துரைக்கப்பட்டும் தமிழக ஆட்சியாளர்கள் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை. கலைமாமணி விருது பெற்ற அவருக்கு பத்மஸ்ரீ விருது எப்போதோ அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
திரு. கே.ஏ.குணசேகரன் அவர்களின் மரணச் செய்தி கேட்டு நேற்றிரவு (17.1.2016) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.
தலித் கலை எழுச்சி நாயகனான திரு கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்
No comments:
Post a Comment