Saturday, 23 January 2016

அஞ்சலி

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைப் பேராசிரியரும், நாட்டுப்புற இசைக்கலைஞருமான கே.ஏ.குணசேகரின் இன்று தனது 61 வயதில் புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார்.
நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற குணசேகரன் தமிழ் நவீன நாடக உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் புகழ்பெற்றவர்.
சத்திய சோதனை, பவளக்கொடி, பலியாடுகள் உள்ளிட்ட 12 நாடகங்களை அவர் எழுதி இயக்கியுள்ளார். நாட்டுப்புற இசைக்கு பொதுவெளியில் ஏற்பையும் மதிப்பையும் உருவாக்கியவராக மறைந்த குணசேகரன் திகழ்ந்தார்.
சிவகங்கை மாவட்டம் இளயான் குடி அருகேயுள்ள மாரந்தை என்ற சிற்றூரில் பிறந்தவராவார். மதுரை தியாகராசர் கல்லூரி, காமராசர் பல்கலைக்கழகம் அகியவற்றில் கல்வி பயின்றுள்ளார்.
மார்க்சிய அரசியல் பின்புலத்தோடு தமிழ் உணர்வையும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் உரிமைகளையும் தனது இசையின் மூலமும் நாடகங்களின் மூலமும் வெளிப்படுத்திவந்த மக்கள் கலைஞராக அவர் திகழ்ந்தார்
இளமாறன் நாகராசா

No comments:

Post a Comment