Friday, 22 January 2016

மக்கள் கலைஞன் கே. ஏ. குணசேகரன்

மக்கள் கலைஞன்
கே. ஏ. குணசேகரன்
------------------------------
இராமநாதபுரம் மாவட்ட 
அறிவொளி இயக்கப் பொறுப்பாளராக நான் பணியாற்றிய காலங்களில்...
என் தோள் சுமைகளில் பெரும் பகுதியை சுமந்த,
தோழர். அலைகள் இராஜ்குமார், மிகச் சிறந்த இசைக்கலைஞன்.
நேரம் வாய்க்கும் போதெல்லாம்...
ராஜ்குமாரை... ஒரு பாடலை பாடச் சொல்லுவேன்.
பாடுவார்.
பாடலைக் கேட்டுக் கொண்டே... கவிழ்ந்தவாறு நான் அழுது கொண்டிருப்பேன்.
திரும்ப... திரும்ப... பாடச் சொல்லுவேன்.
ராஜ்குமார் பாடுவார்.
என் நெஞ்சும் சுவாசமும் சுத்தப்பட்டு லகுவாகும்.
இது போல்...
எத்தனை பகல்கள்...
எத்தனை இரவுகள்...
எத்தனை வருடங்கள் கடந்தனவோ...!
என்னை மட்டுமல்ல...
கேட்கும் திறன் படைத்த அத்தனை ஜீவராசிகளையும்...
உருக்கிக் கரைக்கும்
அந்தப் பாடல்....
'அம்மா...
பாவாடை, சட்டை கிழிஞ்சு போச்சுதே...!
என்னை...
பள்ளிக்கூடப் பிள்ளையெல்லாம்
கேலி பேசுதே...'
இது -
மக்கள் கலைஞன் கே.ஏ.குணசேகரன் அவர்களின் பாடல்.
கோணங்கிக்கும் எனக்கும் பாண்டிச்சேரியில்
கே.ஏ.ஜி. வீட்டில் விருந்து.
என் எழுத்தின்பால்... என்னிலும் பெரும் பற்றாளர் தோழர் கே.ஏ.ஜி.
எங்களை அன்பால் நனைக்கிறார்.
மொட்டை மாடியில் அமர்ந்தவாறு
அவரிடம் நான் வேண்ட...
எனக்காக... கே.ஏ.ஜி. பாடுகிறார்.
'அம்மா...
பாவாடை, சட்டை கிழிஞ்சு போச்சுதே...!
என்னை...
பள்ளிக்கூட பிள்ளையெல்லாம் கேலி பேசுதே...!'
யோவ்...
அலைகள் இராஜ்குமார் ...
எங்கேய்யா இருக்கிறீங்க...?
நம்ம குணசேகரன் போயிட்டாருய்யா..
வேல ராமமூர்த்தி

No comments:

Post a Comment