கே. ஏ. குணசேகரன்
Jan 17N. Ganesan
தமிழிசை அறிஞர் வீ. ப. கா. சுந்தரமும், பின்னாளில் உலக தமிழாராய்ச்சி நிறுவன தலைவராக
விளங்கிய கே. ஏ. குணசேகரனும் எங்கள் இல்லத்தில் பல நாட்கள் தங்கி இருந்து தமிழிசை
ஆய்வுச் செய்திகளை எனக்கு விளக்கியிருக்கிறார்கள். ஹ்யூஸ்டன் மீனாட்சி கோவிலில்
அருமையான நாட்டுப்புற இசைநிகழ்ச்சி தந்தார் முனைவர் குணசேகரன். எனக்காக,
கொங்குநாட்டுப் பூநோன்பின்போது - பிற பகுதிகளில் காணும் பொங்கல் -
சிறுமியர் பூப் பறிக்க ஆற்றங்கரை செல்லும்போது பாடப்பெறும்
“ஓலையக்கா கொண்டையக்கா ஒருசாடு தாழம்பூ
தாழம்பூச் சிற்றாடை தலை நிறக்கப் பூக்காடு”
அருமையாகப் பாடினார். அக்குரல் இன்று மறைந்துவிட்டது.
நண்பர் குணசேகரனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
நா. கணேசன்
No comments:
Post a Comment