என்னருந்தோழன் பேராசிரியர் கே,ஏ,குணசேகரன் அவர்கள் காலமான சேதியை ஏற்றுக்கொள்ள என் மனசு இணங்குதில்லை. ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழர்மீது அவர் காட்டிய பேரன்பின் அடையாளமாக ஈழத்து மாணவர்கள் பாண்டிசேரி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று தமிழர் நாட்டார் கலை நாடகமென்று தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் பணி புரிகின்றனர். உழைக்கும் மக்களின் கலைகளை சாதி விலங்கொடித்து விடுதலை செய்த சமூக கலாச்சார போராளியான எந்தோழனின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளும் பாக்கியம் நோர்வே வந்துள்ளதால் எனக்கு கிட்டவில்லை. எளுச்சிபெறும் புதிய தமிழகத்தின் சிற்பிகளில் ஒருவரான போர்க்குணம் மிக்க தோழர் குணசேகரனுக்கு என் தோழமை வணக்கம்
கவிஞர்.ஜெயபாலன்
No comments:
Post a Comment