Friday, 22 January 2016

தலித் அரங்கியலை முன்னெடுத்த சிறந்த நாடக ஆளுமை

அஞ்சலி
தலித் அரங்கியலை முன்னெடுத்த சிறந்த நாடக ஆளுமையும், பாடகரும், நாட்டார்கலைகள் பற்றிய ஆய்வாளருமான டாக்டர் கே.ஏ.குணசேகரன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனதுயரம் அடைந்தேன்.
தோழர் எஸ்.ஏ.பி. அவர்களால் மேடையேற்றப்பட்டு கலை இலக்கிய இரவுகள் தோறும் கே.ஏ.ஜி பாடிய நாட்களில் இருந்தே அவருடன் பழகியிருக்கிறேன்.
சிறந்த மனிதர். அற்புதமான பாடகர்.
பாண்டிச்சேரிக்குச் செல்லும் போதெல்லாம் கே.ஏ.ஜியைச் சந்தித்து உரையாடுவது வழக்கம், பலமுறை அவரது வீட்டில் உணவளித்திருக்கிறார்.
உலகதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய போது அங்கு நடந்த பல முக்கிய கருத்தரங்குகளில் என்னை அழைத்துப் பேச வைத்திருக்கிறார்.
அவரது பலியாடுகள் மிக முக்கியமான நாடகம்.
தம்பி முருகபூபதி ,புதுவை பல்கலைகழக நாடகத்துறையில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் வாரக்கணக்கில் நானும் கோணங்கியும் புதுவையில் தங்கி பல்கலைகழக வளாகத்திற்குள் சுற்றியலைந்திருக்கிறோம்
அந்த நாட்களில் கே.ஏ.ஜி பகிர்ந்து கொண்ட அன்பும் அரவணைப்பும் மறக்கமுடியாதது.
அவரது மறைவிற்கு கண்ணீருடன் எனது அஞ்சலியைப் பகிர்ந்து கொள்கிறேன்
எஸ்.ராமகிருஸ்னன்

1 comment:

  1. RIP...
    Nengal maraindhalum ungal kalai endrum engal manadhil vazhum...

    ReplyDelete