உறக்கமற்ற மனம் கொண்ட கலைஞர்கள்
கரு.அழ.குணசேகரன் என்னும் என் தோழர் ஐரோப்பிய நாடுகளில் அல்லது ஐரோப்பிய ஒன்றிய ஊர்களில் ஏதோ ஒன்றில் பிறந்து வளர்ந்து பாடி, பாடல் கற்பித்து வாழ்ந்திருப்பாரேயானால் அவரும் க்ளூத் லெவி ஸ்த்ரோஸ் போல 100 ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்.
அவர் துயரே வாழ்வாகக் கொண்டவர். தன் உடலும் தசையும் சுமக்க இயலா பாரம் சுமந்தவர். கலைஞர்களைக் கலைஞர்களாகவே வாழவி்டாத மண்ணில் அவர் தன் நிலைமீறிய பாரம் சுமந்து துயரப்பட்டவர்.
ஒடுக்கப் பட்ட மக்களின் குரல் எனத் தன்னை அடையாளம் காண்பதை அவர் ஏற்று இருந்தாலும் அதனை மீறிய அடையாளம் தனது இசைக்கு இல்லையா எனத் தொடர்ந்து கேட்டபடியே இருந்தார்.
அவர் சீர்காழி கோவிந்தராசன், டி.ஆர். மகாலிங்கம் பாடல்களைப் பாடிக் கேட்டவர்களுக்குத் தெரியும் அவரது மனக்கிடப்பு என்ன என. சாதியத்தின் அழுத்தம் தீண்டாமையின் வெளிநிறுத்தம் எனப் பலவற்றிலிருந்து வெளியேற அவர் தன் இசையைப் பயன்படுத்தினார்.
தனித்த உணர்வின் அழுத்தம் கொண்ட அவருடைய கனவின் ஒரு பகுதி என்ன என அறிந்தவர்க்கு இது புரியக்கூடும் ”இளையராஜாவின் இசையில் பத்து பாடல்களையாவது பாடிவிட வேண்டும்.” கலைஞர்களைக் கலைஞர்களாக இருக்கவிடாத மண் அவர்களைப் பேராசிரியர்களாக்கும், பிறகு அவர்களை உறக்கமற்றவர்களாக்கும். உறக்கமற்ற மனம் உடல் பிரியத் தவிக்கும். நாடோடிப் பாடல்கள்தான் இதிலிருந்து தப்பிக்க இயலும்.
பிரேம்
No comments:
Post a Comment